சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
உகான்: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றியது. இன்றைக்கு உலகின் 200 நாடுகளில் பரவி விட்ட இந்த கொடிய வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு, உகான் நகருக்கு சென்றுள்ளது. அங்கு 2 வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், இப்போது அந்த குழு ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளது.
அந்த குழுவிடம், “கொரோனா வைரஸ், உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பு இல்லை. அனேகமாக ஒரு இடைநிலை உயிரினத்தின் வழியாக அது மனிதர்களுக்கு பரவி இருக்கலாம” என்று உலக சுகாதார நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் விலங்கு நோய்கள் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் நேற்று தெரிவித்துள்ளார்.
malaimalar