சீனாவின் புதிய சட்டம் : அதிகரிக்கும் விவாகரத்து

பீஜிங் : சீனாவில், விவாகரத்துக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை அடுத்து, விவாகரத்துக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, தீடீரென அதிகரித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், விவாகரத்து பெறும் தம்பதியினரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விவாகரத்து எண்ணிக்கையை கட்டுப்படுத்த, சீன அரசு முடிவு செய்தது. இதையடுத்து, விவாகரத்துக்கான நடைமுறையில், பல கடுமையான புதிய சட்ட திருத்தங்களை செய்தது.

விவாகரத்து பெற விண்ணப்பிக்கும் தம்பதியினர், 30 நாட்கள் சேர்ந்து வாழ்ந்து, அதன் பின், மீண்டும் இரண்டாவது முறையாக விண் ணப்பித்தால் மட்டுமே, அந்த மனு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள புதிய சட்டம் வழி செய்கிறது. மேலும், விவாகரத்து செய்வதை கடுமையாக்கும் விதமாக, பல்வேறு புதிய சட்டதிட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

புதிய சட்டத்தால், மன உளைச்சலுக்கு ஆளான சீன தம்பதியினர், அதிக அளவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கத் துவங்கி உள்ளனர். புதிய சட்டங்கள், விவாகரத்துக்கான நடைமுறையினை கடுமையாக்கி இருப்பதாகவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிரிந்து வாழும் சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ள நிர்பந்திப்பதாகவும், பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

dinamalar