கோவிட் -19 தடுப்பூசி பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம்

மலேசியர்கள் இப்போது, மைசெஜாத்தெரா (MySejahtera) பயன்பாட்டின் வழி, கோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.

தடுப்பூசிக்கான பதிவு iOS மற்றும் Android ஆகியப் பதிப்புருக்களில் கிடைக்கிறது.

இருப்பினும், பயனர்கள் மைசெஜாத்தெரா பயன்பாட்டை அவ்வாறு செய்வதற்கு முன்பு புதுப்பிக்க அல்லது பதிவேற்ற வேண்டும்.

தடுப்பூசி பொத்தானை அழுத்திய பிறகு, அது உங்கள் அடையாள அட்டை பெயரையும் எண்ணையும் உறுதிப்படுத்தும்படி கேட்கும்.

உறுதிசெய்யப்பட்டதும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம், தற்போது முதல் கட்டத்தில், முன்னணி ஊழியர்களுக்கானது என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அடுத்த கட்டம் தொடங்கும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்படும்.

இருப்பினும், உங்கள் பதிவுக்கான கூடுதல் விவரங்களை வழங்க ஒரு கணக்கெடுப்புப் படிவத்தை நீங்கள் நிரப்பலாம்.

தடுப்பூசி பெற நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா, உங்களுக்கு நோய் வரலாறு இருக்கிறதா இல்லையா, நீங்கள் சமூக நலத்துறையில் பதிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளியா என்று கணக்கெடுப்பு கேட்கும்.

தொடர்ந்து, அது உங்கள் வசிப்பிடத்தையும் கேட்கும்.

2021 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் கட்டத்தில், மருத்துவ முன்னணி ஊழியர்கள், அமலாக்கப் பணியாளர்கள், மக்கள் நலன்புரி அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோடு, உயர் ஆபத்துள்ள 500,000 ஆசிரியர்களுக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.