பேரணியில் பிரதமரின் உருவ பொம்மையை சாட்டையால் அடித்த இருவர் கைது

கடந்த சனிக்கிழமை தூருன் அன்வார் பேரணியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போன்ற ஒரு உருவப் பொம்மையை “சாட்டையால் அடித்ததற்காக ” 21 மற்றும் 47 வயதுடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரவளான இச்சம்பவத்தின் காணொளிகளைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

“இருவரையும் காவலில் எடுக்க விண்ணப்பம் செய்யப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று முன்னதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் உசுப் ஜான் முகமது, இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

 

-fmt