இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என ஐஎம்எப் பொருளாதார நிபுணா் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவை,
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது என சா்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் தெரிவித்தாா்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: – உலகில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் எதுவென்று பாா்த்தால், அது இந்தியாதான். இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
உலக அளவில் சுகாதார நெருக்கடி நிலவும் வேளையில், தனது தடுப்பூசி கொள்கைகள் மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது” என்றார்.
dailythanthi