உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 933- ஆக உயர்ந்துள்ளது.

ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுடங்காமல் பரவி வருகிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எனினும்,  2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77- கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சத்து 5 ஆயிரத்து 633-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 961- ஆக உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.

dailythanthi