தைவானில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 36-பேர் உயிரிழப்பு என தகவல்

விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தைபே, தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன் நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் சுரங்கப்பாதை கடக்க வேகமாக பயணித்து கொண்டிருந்தது.

அப்போது டிரக் ஒன்றின் மீது ரெயில் மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் தடம் புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் சுவர்களில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 36  பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.  மேலும்  72 பேர் காயம் அடைந்தனர்.

தைவானில் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய ரெயில் விபத்து இதுவாகும். காயம் அடைந்தவர்களில் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரெயில் தடம் புரள காரணமாக இருந்த டிரக், உரிய முறையில் பார்க் செய்யப்படமால் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளிவந்துள்ளது.  விபத்துக்குள்ளான ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தங்கள் உடமைகளுடன் தண்டவாளத்தில் நடந்து செல்லும் காட்சிகள் உள்ளுர் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

dailythanthi