உங்கள் கருத்து: தெரேசா கொக்: கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதைக் கட்டுப்படுத்துவது அதிகார அத்துமீறல்!
சிந்திப்பவன்: கூட்டத்தினர் அமைதியையும் நீதியையும் நியாயத்தையும் வேண்டிப் பாடிக்கொண்டே செல்வது கிறிஸ்மஸ் பாடல்.அதற்கும் போலீஸ் அனுமதி தேவையா?
கிறிஸ்மஸ் பாட்டுப் பாடிச் செல்வது, அமைதியைப் பரப்பும் ஒரு வழி என்ற முறையில் போலீசுக்காக செய்யப்படும் சேவை.அதற்கு அனுமதி தேவை.அதே வேளை, ஒழுங்கற்ற ஒரு கூட்டம் மாட்டுத்தலையைத் தரையில் போட்டு மிதிக்கும்.ஆனால், வெறுப்பையும் வேற்றுமை உணர்வையும் வன்முறையையும் தூண்டும் அந்தச் செயலுக்கு அனுமதி தேவையில்லை.
அதாவது, அமைதியைப் பரப்ப அனுமதி தேவை. வெறுப்பை வளர்க்க அது தேவையில்லை.
டாக்: விற்பனை மையங்களில் கிறிஸ்மல் பாடல்களை ஒலிபெருக்கிகள் நாளெல்லாம் பாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஞானக் கீதத்தை வீடு வீடாகப் பாடிச் செல்வதற்கு மட்டும் அனுமதி தேவையா?
நியாயவான்: கட்டுப்பாடுகள் தளர்ந்துவரும் ஓர் உலகில், மக்கள் கூடுதல் உரிமைகளுக்குக் கோரிக்கை விடுக்கும் ஒரு நாட்டில் இந்த மூடர்கள் மட்டும் மக்கள் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
அனாக் பங்சா மலேசியா: பேராயர் மர்பி பாக்கியம் என்ன சொல்லப் போகிறார்? காலம் காலமாக கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஒரு பழக்கம்கூட அரசியல் ஆக்கப்படுகிறது.
ஒரு சிறிய ஆனால் முக்கியமான பாரம்பரியம் மறுக்கப் படுகிறது. இந்த லட்சணத்தில் வத்திகனுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.
இது சமய உரிமையை ஒடுக்கும் ஒரு முயற்சி என்பது தெளிவு.இதற்கெல்லாம் அம்னோ 13-வது பொதுத் தேர்தலில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
கரும்புலி: என்ன நடக்கிறது. போலீஸ் என்ன செய்ய முயல்கிறார்கள்? கிறிஸ்மஸ் பாட்டு பாடுவது காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு மரபு. கிறிஸ்துவர்களின் வீடுகளுக்குச் சென்றுதான் அதைப் பாடுவார்கள்.போலீசார், இந்த கிறிஸ்மஸை அவலமிக்க கிறிஸ்மசாக மாற்றிவிடக் கூடாது.
பெயரிலி: அம்னோ/பிஎன் கிறிஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்க முயல்கிறது.பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள். அம்னோ/பிஎன் மூடர்கள்தான் வம்பு வளர்ப்பவர்கள்.
கருத்துக்கணிப்பு: இளைஞர்கள் பிஎன்னுக்கு ஆதரவாக உள்ளனர்
ரிக் டியோ: கருத்துக்கணிப்பு உண்மை என்றால் மலாய் இளைஞர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
மலாய் இளைஞர்கள் தொடர்ந்து அம்னோவை ஆதரித்து வந்தால் நாட்டின் அழிவைத் தவிர்க்க முடியாது. ஊழல்தான் இதற்கு முக்கிய காரணம். அதற்காகவே, அரசாங்கத்தை மாற்ற வேண்டும்.
நாடு ரிம462பில்லியன் கடனில் சிக்கிக்கொண்டிருக்கிறது.நிமிடத்துக்கு நிமிடம் அது உயர்ந்து கொண்டே போகிறது. விரைவில் மேலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை வந்துவிடும்.அப்போது இன்னொரு சிம்பாப்வே ஆகிவிடுவோம்.
நம்பாதவன்: மதில்மேல் பூனையாக உள்ள வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க அம்னோ/பிஎன் எல்லா வகையிலும் முனையும். தன்னால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் பக்காத்தானுக்கு வாக்களித்தால் அழிவு நிச்சயம் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தியாவது வெற்றிபெற முயல்வார்கள்.
தைலக்: இது,இளம் வாக்காளர்களைக் குழப்புவதற்காகவே செய்யப்பட்ட ஒரு பயனற்ற ஆய்வு.நான் பேசிப்பார்த்தவரை இளம் வயதினர்(மலாய்க்காரர், மலாய்க்காரர்-அல்லாதவர்) அனைவருமே அம்னோ/பிஎன் எதிர்ப்பாளர்கள்தான். இனவாதம், சமய உணர்வுகளைத் தூண்டிவிடுதல், ஊழல் முதலியவற்றின் காரணமாக அவர்கள் அம்னோ/பிஎன்-னை எதிர்க்கிறார்கள்.
அதனால், பக்காத்தானுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார்கள். அவர்களும் எதிர்பார்க்கப்படுவதுபோல் செயல்படவில்லை அவர்களையும் வெளியேற்றுவார்கள்.
பல்லின வாதி: மலேசியா என்றில்லை மற்ற நாடுகளிலும்கூட கருத்துக்கணிப்புகள் பெருமளவு தப்பாகவே இருக்கும். ஏனென்றால், நேர்காணல் செய்யப்படுபவர்கள் தாங்கள் பெரும்பாலும் மாற்றரசுக்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்பதைக் காண்பித்துக்கொள்ள மாட்டார்கள்.அதுவும், அவர்கள் அரசாங்கத்தில் அல்லது அரசுசார்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், தேர்தல் வந்துவிட்டால் அவர்கள் ஒட்டுமொத்தமாக மாறிவிடுவார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள்.