ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் – ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன்

பதவியேற்று 100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் – ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வரும் 19-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்களாக ஆகிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசியதாவது:

இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இதன்படி வரும் 19-ம் தேதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள தகுதியானவர்கள் ஆகின்றனர். அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

தனது 75 நாட்கள் பதவிக்காலத்தில் 15 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. இதுவரை 75 சதவீத மூத்த குடிமக்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது.

தன்னுடைய 100-வது நாள் பதவி காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என எதிர்நோக்கி இருக்கிறேன்.

அமெரிக்காவில் கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

maalaimalar