நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமானங்களும் ரத்து – ஹாங்காங் அரசு அறிவிப்பு

நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமானங்களும் ரத்து – ஹாங்காங் அரசு அறிவிப்பு

கொரோனா அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

ஹாங்காங், இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, மும்பை – ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

dailythanthi