உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியது

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.18 கோடியைத் தாண்டியது.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

maalaimalar