ஈராக்கில் கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 82 பேர் பலியான சம்பவத்தில் சுகாதார மந்திரி பதவி விலகியுள்ளார்.
பாக்தாத், ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 24ந்தேதி இந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்து உள்ளது.
இதனை தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 82 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி விசாரணை குழு ஒன்று ஆய்வு செய்தது. இதன்பின்னர், சுகாதார மந்திரி மற்றும் பாக்தாத் நகர மேயர் ஆகியோரை சஸ்பெண்டு செய்த உத்தரவை ரத்து செய்யும்படி பரிந்துரை செய்தது.
இந்நிலையில், ஈராக் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி ஹசன் அல் தமிமி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதம் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் ஏற்று கொண்டுள்ளார்.