கொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை

இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம்

மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறி உள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் தொடர்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அவ்வகையில் இலங்கை அரசும் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்திய பயணிகள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறி உள்ளது.

maalaimalar