இலங்கை பட்ஜெட் 2021: மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அறிக்கையில்…

இலங்கை அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடங்கிய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய விடயங்களின் தொகுப்பு. 1.பெருந்தோட்டம் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021ஆம்…

கொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து…

மஹிந்த ராஜபக்ஷ கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை…

ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல்

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது சமூகப் பரவல் இல்லை என்று…

`இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்` – தற்போதைய…

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக…

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிடுகிறது.…

மாவட்ட ரீதியில் கொரோனா விவரம்..

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று இனங்காணப்பட்ட, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மாவட்ட ரீதியில் இன்று (28)வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது, தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச்…

இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது…

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை, கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக்…

விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை…

ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம். அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது. அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட…

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர்,  ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச்…

மகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹூ நன்றி தெரிவிக்கின்றேன் என  சுனாமியில் காணாமல் போன மகனை  கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…

மாகந்துர மதுஷ் படுகொலை – பாரளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்

போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று -20- உரையாற்றிய ஜே.வி.பியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை காப்பாற்றவா…

இலங்கை: மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு அரசு…

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது மகன், நமல் ராஜபக்ஷ, அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ (71), நாட்டின் அதிபராக…

இலங்கையில் சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை: முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்…

இலங்கையின் அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.…

இலங்கை: இரு அங்குல புத்தர் சிலையின் மதிப்பு 600 கோடி…

இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 238 கோடி ரூபாய்) என…

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி – பின்னணி என்ன?

இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19, 3ஆவது கொத்தணி மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், சீன உயர்மட்ட தூதுக்குழுவொன்று கடந்த 8ஆம்…

“கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது” – இலங்கை அரசு தகவல்

இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொலும்பு, இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவங்கொட பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா…

‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை

அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான…

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ஏன் விடுவிக்கப்பட்டார்? நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்ஷ…

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.…

நாட்டில் மேலும் 246 பேருக்கு கொரோனா

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்ந்து  569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா…

வெங்காய விலை: இந்திய ஏற்றுமதி தடையால் பாகிஸ்தான், சீனாவை அணுகும்…

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கையில் பெருமளவில் காணப்படுவதாக வெங்காய மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வெங்காய விவசாயம் முன்னெடுக்கப்படும் வேளையில், உள்நாட்டு தேவைக்கு வெங்காய உற்பத்தி போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக உள்நாட்டு தேவைக்கான பெருமளவிலான வெங்காயம், இந்தியாவில்…

முதல் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. 09 பெண் மூத்த பெண் பொலிஸ் பரிசோதர்களின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு  பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளதுடன், அதிலிருந்து…

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் – சர்ச்சையா சாதனையா?

இலங்கையில் ஆளும் ராஜபக்‌ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம்,…

இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் – சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெற்றதாக ராமேஸ்வரத்தில் உள்ள மாநில கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் தனுஷ்கோடி…