தனஷ்க மீதான மற்றுமொரு கிரிக்கெட் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ள உள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்திருந்தது.

ஆனால் அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்காததால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின்னர், அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தனுஷ்கவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிங்கள விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்தார்.

இதன்படி, SSC ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் தற்போது ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க விளையாட உள்ளார்.

 

 

 

-ad