நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்றும் நாளையும் தேவாலயங்கள் மற்றும் ஏனைய சமய வழிபாட்டுத் தலங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

போலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, குருமார்கள் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான எந்தவொரு உதவிக்கும் பொலிஸ் தலைமையகத்தை 0112 47 2757 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதேவேளை, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் இலங்கையின் பிரதான நள்ளிரவு நத்தார் ஆராதனை ஹால்பேவில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் இன்று இரவு 11.45 மணிக்கு நடைபெற உள்ளது.

 

 

-ad