நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான குடும்பங்களின் சராசரி செலவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள 73.6 சதவீதமான குடும்பங்கள் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாதாந்த செலவு அதிகரித்துள்ள குடும்பங்களின் உணவுச்செலவு 99.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதேவேளை போக்குவரத்து செலவு 83 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 குடும்பங்கள் கடன்சுமையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியினால், 3 முதல் 21 வயதிற்கு உட்பட்டவர்களில் 54.9 சதவீதமானவர்கள் கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ib