மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக்களம்! பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு

கோட்டா கோ கம போராட்டக்களம் ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் போராட்டக்களத்தில் பொதுமக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக ஓரிரு…

பல பிரச்சினைகளுக்கு பிரதமரால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது – வஜிர…

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு…

கோட்டாபய, ரணில் உட்பட 13 பேருக்கு எதிராக வழக்கு பதிவு:…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர்…

“தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்” மைத்திரிபால அதிரடி அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு…

கோட்டா – ரணிலுடன் இணைந்து நாம் ஆட்சி அமைக்கவேமாட்டோம்! சஜித்…

மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டில் உணவு மற்றும் குடிபானங்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் சார்ந்து தொடர்புடைய…

ஊடகவியலாளரைப் போல் செயற்படும் ரணில் – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பிரதமரே நாட்டுக்குத் தேவை, மாறாக ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு…

உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடம் கிடைத்துள்ளது. குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த…

இலங்கையில் வேகமெடுக்கும் புதிய வைரஸ்..!! 14 உயிர்கள் பறிபோனது

இலங்கை - இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது. கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம்…

கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு – அரைக்கம்பத்தில்…

கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மோட்டார் சைக்களில் விபத்தில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர்…

இலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை: ஐ.நா.…

அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து…

நடுவானில் நெருங்கி வந்த விமானங்கள்… விபத்தை தவிர்த்த இலங்கை ஏர்லைன்ஸ்…

அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2 முறை தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானிகள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாராட்டி உள்ளது. லண்டனில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர்.…

இலங்கையில் தொடரும் நெருக்கடி – உயிரை பணயம் வைத்து ரயிலில்…

நீண்ட வார விடுமுறைக்கு பின் நேற்று (15ம் திகதி) அலுவலக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில், ​​போதிய பேருந்துகள் இல்லாததால், ரயில்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பிரதான மார்க்கம் மற்றும் கடலோரப் பாதையில் உள்ள ரயில்களில் நெரிசல் அதிகமாக…

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா

மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர இந்திய பிரதமர் மோடி வற்புறுத்தியதாக பெர்டினாண்டோ புகார் தெரிவித்தார். காற்றாலை மின்சார திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது…

பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு! – நாடுகடந்த…

இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு -தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின்…

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – உலக சுகாதார அமைப்பின் தலைவர்…

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை கண்டறியவும், தற்போதுள்ள கையிருப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கவும் உலக சுகாதார அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாசிஸ் தெரிவித்தார். அவசரகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அடுத்த…

இலங்கையில் ஆடை கொள்வனவு செய்தால் அரிசி இலவசம்

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின் பிரபல ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆடை வாங்கினால் அரிசி இலவசம்…

தாம் சுதந்திரமான பிரதமர்! ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல-…

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப 18 மாதங்களாவது செல்லும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். WION என்ற இந்திய செய்தி நிறுவனத்தின் குளோபல் லீடர்ஸ் சீரிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணில் விக்கிரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையை சீனா கைவிட்டு விட்டதாக கூறப்படும் கூற்றை ரணில்…

முககவசம் அணிவதிலிருந்து விலக்கு-மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) பொது மக்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு குறித்து தனது கவலைகளை எழுப்பியுள்ளது. ஜூன் 9 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது ஜூன் 10, 2022 முதல்,…

இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!

சாத்தியமான சமமான விநியோகத்தை செயல்படுத்த, எதிர்வரும் வாரங்களில் ரேஷன் என்ற பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தலாமா என்பதை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாத்தறை உட்பட்ட பல பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலக உணவு திட்டம் இலங்கையின்…

இலங்கையில் சிறுவர்கள் பட்டினி நிலை – 25.3 மில்லியன் டொலரை…

சிறுவர்களுக்காக நிதியுதவி இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள சிறுவர்களுக்காக சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கோரியுள்ளது. எதிர்வரும் 7 மாதங்களுக்குள் இலங்கையிலுள்ள சிறார்களுக்கு அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக UNICEF என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்…

இலங்கையில் மூன்று மாத காலத்தில் 3516 ஆர்ப்பாட்டங்கள்

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலத்தில் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண் எண்ணெயை கோரி 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல்…

அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது

நாட்டில் தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் வெளிநாடுகளின் உதவிகளை பெற வேண்டுமாயின் குறிப்பிட்ட காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனத்…

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவு மக்கள் கூட்டம்

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நீண்ட வார இறுதி விடுமுறை நீண்ட வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கும், நகர்ப்புற மக்கள் விடுமுறையைக் கழிக்கவும் தூரப் பிரதேசங்களுக்குச்…