அந்நிய செலாவணி கையிருப்புகளை நிர்வகிப்பதற்காக வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை இலங்கை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான நிதியை அனுப்புவதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் டிசம்பர் 28 முதல் ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
–