முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரிதும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவிலும் குளங்கள் வான் பாய்வதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிஇல் மக்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அங்கு வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.
-jv