கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடி அதிகரிப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காவல் துறையினரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில்,…

போர்க்குற்ற தடயங்களை அழிக்க அரசு முயற்சி : த.தே.கூ

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை…

முள்ளிவாய்க்காலில் மக்கள் குடியமர முடியாது : இலங்கை அரசு

வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை…

இலங்கையில் பெரிய துறைமுகம் சீனா அமைக்கிறது

இலங்கையில் 500 மில்லியன் டோலர் செலவில் பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சென்றுவந்தார். அப்போது இத்துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை - சீனா இடையே கையெழுத்தானது. இலங்கையில் புதிதாக அமைக்கப்படும் இத்துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின்…

கிழக்கு மகாணத்தில் அரச படைகளுக்கு பலத்த எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள மர்மமனிதர்களின் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொள்ளை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அண்மைக் காலமாக கிழக்கு மகாணம் உட்பட…

நெருக்கடியில் இடைத்தங்கல் முகாம் மக்கள்

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம் பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அடிப்படை வசதிகளை நிறுத்தி தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும்…

போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன : ICRC

இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் போது பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களை பரிமாற்றம் செய்யும் பணிகளில்…

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க வானூர்திகள் ஊடுருவல்

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகளின் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் வான்படை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கப் போர் வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலங்கை வான்படையினர் சுமத்தியிருந்தனர். எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம், இலங்கை வான்பரப்பில் அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க வானூர்திகள் ஈடுபடவில்லை…