நிபுணர்: மரபணு மாதிரிகள் பயனற்றவையாக இருக்கலாம்

36 மணி நேரத்தை தாண்டி விட்ட மரபணு மாதிரிகள் “அர்த்தமுள்ள ஆதாரமாக” இருக்க முடியாது என ஆஸ்திரேலிய தடயவியல் உடற்கூறு நிபுணர் டாக்டர் டேவிட் வெல்ஸ் கூறுகிறார்.

அத்தகைய மாதிரியிலிருந்து முடிவுகளைப் பெறுவது மிகவும் சிரமம் என அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். அவர் பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் சங்கர நாயர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

சங்கரா: புகார்தாரரின் குதத்திலிருந்து அந்த மாதிரி எடுக்கப்படுவதற்கு முன்பு 56 மணி நேரம் கடந்து விட்டால்  மரபணுவை மீட்க முடியுமா?

வெல்ஸ்: நான் மிகவும் வியப்படைவேன். மரபணு வைக்கப்பட்ட 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்திற்கு பின்னர் குதத்திருந்து எடுக்கப்படு மரபணு எடுக்கப்பட்ட சம்பவத்தை நான் இது வரை பார்த்தது இல்லை. அர்த்தமுள்ள முடிவுகள் ஏதும் கிடைக்கும் என நான் சந்தேகப்படுகிறேன்.

தாம் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவர்கள் தம்மிடமிருந்து மாதிரியை எடுத்ததாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தமது சாட்சியத்தின் போது நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

பின்னர் அந்த மாதிரிகள் சீல் வைக்கப்பட்டு விசாரணை அதிகாரி சூப்பரிடெண்ட் ஜுட் பிளேஷியஸ் பெரெராவிடம் ஒப்படைக்கப்பட்டன என்றும் அவர் அதனை மேலும் 43 மணி நேரம் வைத்திருந்த பின்னர் 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி ஆய்வு செய்யப்படுவதற்காக இரசாயனத் துறைக்கு அனுப்பினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்லது.

அந்த ஆய்வுக்கு அனுப்பபட்ட மாதிரிகளின் தன்மை குறித்து சங்கரா, வெல்ஸிடம் வினவினார்