நாடு சூறையாடப்படுகிறது டிஏபி வாக்குவாதத்தில் மூழ்கியுள்ளது

“பிஎன் – ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வேலையைச் செய்யுங்கள்.”

டிஏபி ஞானாசிரியர் நெருக்கடியில் லிம் குவான் எங் தலையிடுகிறார்

பார்வையாளன்: அந்த விவகாரத்தை தொடக்கி வைத்தது கர்பால் சிங். அதனைத் தொடர்ந்து பினாங்கு முதலமைச்சர் பேசினார். எந்த குறிப்பிட்ட நபரும் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அடுத்து சில சந்தர்ப்பவாதிகளும் கூஜாக்களும் தங்கள் சொந்த நலனுக்காக கர்பாலின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த சர்ச்சையில் சேர்ந்து கொண்டனர். அந்த வேளையில் தங்களை எதிர்நோக்கியிருக்கும் பெரிய இலட்சியத்தை மறந்து விட்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தற்காலிமாக ஒதுக்கி விட்டு நாட்டில் உள்ள பெரிய திருடர்களை விரட்டியடிப்பது தான் அந்த பெரிய இலட்சியம்.

2011ம் ஆண்டில் மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி-கிட்டத்தட்ட 60 பில்லியன் ரிங்கிட் அந்தத் திருடர்களினால் களவாடப்பட்டுள்ளது. ஆகவே இப்போது முதல் நாட்டுப் பற்றுள்ள, பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மலேசியனுடைய போராட்டமும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதாக இருக்க வேண்டும்.

டிபாலா: டிஏபி பல இனக் கட்சி. அதில் ராமசாமி போன்ற இன அடிப்படை அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. ராமசாமி, டிஏபியில் கடந்த காலத்தில் இருந்ததே இல்லை. 2007ம் ஆண்டுதான் அவர் டிஏபி-க்கு வந்தார்.

கர்பால் கடந்த 45 ஆண்டுகளாக டிஏபி-யில் இருக்கிறார். ஆர் எஸ் என் ராயார் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் டிஏபி-யில் இருந்து வருகிறார். தனசேகரன் டிஏபி-யில் இணைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

அவர்களில் யாரும் ராமசாமியைப் போன்று நடந்து கொண்டதில்லை. அவர்கள் யாரும் பதவிகளை நாடவில்லை. ஆனால் புதிதாக வந்த ராமசாமி, துணை முதலமைச்சர் II பதவியை விரைவாக பிடித்துக் கொண்டார். ஜமீனைப் போன்று நடந்து கொண்டார். தமது சொந்த வேட்பாளர்களைப் பெயர் குறிப்பிடுகிறார்.

கர்பால் அதனை நிராகரித்த போது மூத்த கட்சித் தலைவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் திருப்பித் தாக்கினார்.

டிஏபி-யில் உள்ள இந்தியர்களுக்குத் தம்மைத் தலைவனைப் போlல் காட்டிக் கொள்ள ராமசாமி முயலுகிறார். டிஏபி-யில் ராமசாமி போன்றவர்களுக்கு இடமில்லை. டிஏபி பல இனக் கட்சி. தொடர்ந்து அப்படித்தான் இருக்கும். இனவாத அரசியல் போக்கைக் கொண்ட ராமசாமி மஇகா/பிஎன்-னில் சேர வேண்டும்.

கூ பூன் கியாட்: ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் மஇகா உறுப்பினரைப் போல நடந்து கொள்கிறார். சாமிவேலு போன்றவர்களுடன்தான் அவர் ஒத்துப் போக முடியும்- மித மிஞ்சி நாடகமாடுவதும் கூஜா தூக்குவதும். இத்தகையை நாகரீகமற்றவர்களிடமிருந்து டிஏபி ஒதுங்கியிருக்க வேண்டும்.

மோகன் காந்தி: அந்த அத்தியாயத்தைத் தொடருவது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் முட்டாள்தனத்தை காட்டுகிறது. சொந்த நலனுக்காக சண்டையிட்டுக் கொண்டு சிறிய பிரச்னைகள் மீது கூட தாங்கள் வேறுபட்டிருப்பதை பிஎன் -னுக்கு காட்டிக் கொண்டிருக்கும் அந்த அரசியல்வாதிகளில் சிலர் மீது டிஏபி, பக்காத்தான் ஆதரவாளர்களாகிய எங்களுக்கு வெறுப்பு வந்து விட்டது.

பிஎன் – ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வேலையைச் செய்யுங்கள்.

காலத்துக்கு ஒவ்வாத அந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, கட்சியில் உள்ள மூத்த அல்லது இளைய தலைவர்கள் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சேவை செய்யவே மக்கள் உங்களை அந்த இடத்தில் வைத்துள்ளனர். சண்டையிட்டுக் கொள்வதற்காக அல்ல.

கேஎஸ்என்: எந்த அரசியல் கட்சியிலும் ஜமீன்களும் ஞானாசிரியர்களும் இருக்கக் கூடாது. கட்சி அமைப்புக்களை டிஏபி நிர்வாகக் குழு போன்ற அமைப்புக்கள் செய்யும் முடிவுகளை எல்லோரும் மதிக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். எந்தக் கட்சிக்கும் ஏன் நாட்டுக்கும் கூட தாம் இன்றியமையாதவன் என யாரும் எண்ணக் கூடாது.

டிஏபி இன்றைய நிலையை எட்டுவதற்கு குறிப்பாக டிஏபி மனிதர் ஒருவர் பினாங்கு முதலமைச்சர் பதவியை அடைவதற்கு கீழ் நிலையிலிருந்து மேல் நிலை வரையிலான அனைத்து மக்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அந்த அனைத்து கடின உழைப்பையும் கூஜா தூக்கிகள் விரயமாக்கி விட அனுமதிக்கக் கூடாது.

கர்பாலும் ராமசாலியும் மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள். இது போன்ற அற்பத்தனமான அரசியல் பிரச்னைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கழுகுகள் காத்திருக்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.

TAGS: