கோவிட் 19 | பி.கே.பி. 3.0 தொடங்கி 23 நாட்களாகிவிட்டன, ஆனால் தொற்று பரவல் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இன்று நாட்டில், 7,748 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று 86 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,182 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று 6,624 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (2,612), கோலாலம்பூர் (851), நெகிரி செம்பிலான் (709), சரவாக் (706), ஜொகூர் (446), பினாங்கு (376), பேராக் (371), சபா (287), கிளந்தான் (286), கெடா (263), மலாக்கா (234), லாபுவான் (230), திரெங்கானு (203), பஹாங் (146), புத்ராஜெயா (20), பெர்லிஸ் (8).