காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் மரணம்

பகாங், காராக்கில் உள்ள பெந்தோங் தொழிற்பேட்டையில் உள்ள காகித ஆலை ஒன்றில் நேற்று இரவு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயந்திரத்தில் சிக்கியதாகக் கருதப்படும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சைபுல்நிஜாம் மிஸ்காம் (32) என்ற அந்தத் தொழிலாளி இயந்திரத்திற்குள் சிக்கி, பின்னர் சுயநினைவை இழந்ததாக பெந்தோங் தற்காலிக மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்மி மஹ்மூத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விபத்து மரணம் (திடீர் மரணம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் துல்லியமான பின்னணியைக் கண்டறிய மேல் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

-fmt