தடுப்பூசி போடாதவர்களுக்கே தொற்று பரவுகிறது: மருத்துவ நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்: கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலக அளவில் கோவிட் தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ள போதிலும், தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. ஒரு சில நாடுகளில் கோவிட் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பாதிப்பில் இருந்து மீள தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தீர்வாக உள்ளது. ஆனால், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளால், சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களே தற்போது அதிகமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘அமெரிக்காவில் கடந்த வாரத்தில் கோவிட் தொற்றுகள் 11 சதவீதம் அதிகரித்து உள்ளன. தற்போது அமெரிக்காவில் டெல்டா வைரசே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்’ எனத் தெரிவித்து உள்ளது.

dinamalar