கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்

கோவிட் பரவல், உலக சுகாதார அமைப்பு, சவுமியா சுவாமிநாதன்

புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5ல் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம், கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை.

டெல்டா வகை வைரஸ், மக்கள் கூடுதல், ஊரடங்கில் தளர்வு, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவில்லை. இதனால், பரவல் அதிகரிக்கிறது. முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். அதுவே, டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar