வாழ்வின் மிக சிறந்த நாள் இன்று – விண்வெளி பயணம் குறித்து ஜெப் பெசோஸ் பெருமிதம்

நியூ ஷெப்பர்டு ராக்கெட்

விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் கடந்த வாரம் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளி பயணம் சென்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்.

வாஷிங்டன்: உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை நேற்று தொடங்கியது.

ஜெப் பெசோஸ் அடங்கிய குழுவினர்

புளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜெப் பெசோஸ் அடங்கிய குழு வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளது. 11 நிமிட விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெக்ஸாஸ் பகுதியில் இந்த குழு தரையிறங்கியது.

இதில் ஜெப் பெசோஸ், அவரது சகோதரர், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் என மொத்தம் 4 பேர் விண்வெளி சென்று திரும்பினர்.

முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசோஸ், ”இது வாழ்வின் மிக சிறந்த நாள்” என்றார்.

maalaimalar