“அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது. அப்போது விவசாய அமைச்சராக இருந்த முஹைடினும் அவர்களில் ஒருவர்.”
பதவி விலகுமாறு இன்னொரு அம்னோ எம்பி, ஷாரிஸாட்-டிடம் சொல்கிறார்
லிம் சொங் லியோங்: அந்த விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலை மட்டும் விலகுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் அவர் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது.
அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது? அப்போது விவசாய அமைச்சராக இருந்த முஹைடினும் அவர்களில் ஒருவர். தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நஜிப் ரசாக்கிற்கு அந்த ஊழல் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் அவரும் பொறுப்பேற்க வேண்டும்.
புளாக்ஸ்மித்: என்எப்சி (தேசிய விலங்குக் கூட நிறுவனம்) தலைமை நிர்வாக அதிகாரியான ஷாரிஸாட்டின் கணவருக்கு மாதம் ஒன்றுக்கு 100,000 ரிங்கிட் சம்பளம். அவருடைய 31 வயதான மூத்த புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 45,000 ரிங்கிட்டும் 27 வயதான இரண்டாவது புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 35,000 ரிங்கிட்டும் 25 வயதான மூன்றாவது புதல்வருக்கு மாதம் ஒன்றுக்கு 35,000 ரிங்கிட் ஊதியம் கொடுக்கப்படுகிறது.
ஆகவே அந்தக் குடும்பத்துக்கு மொத்த மாத சம்பளம் 215,000 ரிங்கிட்- அல்லது வருடம் ஒன்றுக்கு 2.58 மில்லியன் ரிங்கிட்- தோல்வி அடைந்த ஒரு திட்டத்தை நடத்துவதற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து அந்தப் பணம் வழங்கப்படுகிறது.
நிக்கோல்: ஷாரிஸாட் பதவி விலகுவது மட்டும் போதாது. அந்த பெரிய ஊழலுக்கக அவர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்படவும் வேண்டும். அந்த விஷயம் மீது பிரதமர் நஜிப் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவரும் ஊழல்வாதி என்பதைக் காட்டுகிறது.
அரமகெடோன்: ஷாரிஸாட் விலக வேண்டும் என இரண்டு அம்னோ எம்பி-க்கள் மட்டுமே வேண்டுகோள் விடுத்துள்ளனர். மற்றவர்கள் காற்று வீசும் திசையை கணித்துக் கொண்டிருக்கும் சாதாரண அரசியல்வாதிகள். அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் துணிச்சல் இல்லாதவர்கள்.
அவர்களது தலைவர்கள் வழக்கம் போல முடிவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர். எது சரி எது தவறு என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.
நீலகிரி: 250 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட என் எப் சி விஷயத்தில் ஷாரிஸாட் விலக வேண்டும் என சிலர் ஏன் கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை. காரணம் அதைவிட அதிகமான 500 மில்லியன் ரிங்கிட் ஊழலில் சம்பந்தப்பட்ட மனிதரை ராஜினாமா செய்யுமாறு யாரும் கேட்டுக் கொள்ளவே இல்லை.
550 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 250 மில்லியன் ரிங்கிட் சிறிய தொகை ஆகும். ஆகவே ஷாரிஸாட் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு தார்மீக ரீதியில் எல்லா நியாயங்களும் உண்டு.
பேப்: ஷாரிஸாட் தயவு செய்து விலக வேண்டாம். பட்டம் பறக்க விடுமாறு அந்த முட்டாள்களிடம் சொல்லுங்கள். அடுத்த தேர்தலில் லெம்பா பந்தாய்க்கு நீங்களே சரியான வேட்பாளர். மாட்டுக் கூட்டத்தை கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஆதரவாகப் பேச நஜிப்பை உங்களது எல்லாக் கூட்டங்களுக்கும் வரச் சொல்லுங்கள்.