வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி – சவுதி அரசு முடிவு

தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ரியாத், சவுதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு  காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய அரசு தடை விதித்தது.

தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மாதம்  தடுப்பூசி செலுத்தி கொண்ட சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி முதல் 12ம் தேதி வரை ஹஜ் பயணம் நிகழ உள்ளது.

உம்ரா புனித பயணம் மெக்கா மற்றும் மதினா ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது. ஹஜ் பயணம் போன்று இல்லாமல் உம்ரா பயணத்தை ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

தற்போது உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

உம்ரா புனித பயணத்திற்கு  முதலில் மாதத்துக்கு 60 ஆயிரம்  பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த எண்ணிக்கை ஒரு மாதத்துக்கு 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, மாடர்னா தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த நான்கு தடுப்பூசிகளையும் சவுதி அரேபிய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

dailythanthi