ஹைதியில் நிலநடுக்கம, உயிர் சேதம் அதிகரிப்பு

லெஸ் கெயெஸ்-ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1400 ஆக அதிகரித்துள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதியில் 14ம் தேதி, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கடற்கரையோரம் உள்ள லெஸ் கெயெஸ் நகரம், பெரும் சேதங்களை சந்தித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுதும் இடிந்து தரைமட்டமாகின.

இதைத்தவிர, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவையும் சேதம்அடைந்துள்ளன.கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1,297 ஆக உயர்ந்துள்ளது. உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.மேலும், 5,700க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காயங்களுடன் மீட்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால், நகரில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

(நன்றி Dinamalar)