அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ரஷ்யாவின் பாதுகாப்பை நேரடியாக பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விசா அங்கீகாரம் உள்ள நிலையில், சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள், மத்திய ஆசிய நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்படுகின்றனர். இதற்கு விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அகதிகள் என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத படைகளும் மத்திய ஆசிய நாடுகளுக்கு நுழைவதைத் தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீட்பு விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dinamalar)