லாகோஸ்,
நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் பகுதியில் எல்வா ஜங்கம் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அவர்களின் வீடு உள்ளிட்ட உடைமைகளை அடித்து, நொறுக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை கவர்னர் சைமன் லாலங் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது ஒரு காட்டுமிராண்டித்தன செயல் கூறியதுடன், இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
(நன்றி Dailythanthi)

























