யாருக்கு பூஸ்டர் டோஸ்? அறிவிப்பை எதிர்பார்த்து பிரிட்டன்

பிரிட்டன், தன்நாட்டு மக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கடந்த பல வாரங்களாக விவாதித்து வருகிறார்கள். கொரோனா குளிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, பிரிட்டன் அரசு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவிடம் அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தது.

ஆனால் இதுவரை அக்குழுவினரிடம் இருந்து வர வேண்டிய பரிந்துரைகக்காக அரசு காத்திருக்கிறது. இரண்டாம் டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்துவது தான் பூஸ்டர் டோஸ் என்றழைக்கப்படுகிறது.

(நன்றி BBC TAMIL)