ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு

ரோம்,

இத்தாலி நடத்திய ஜி-20 நாடுகள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியது.தலீபான்களின் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அது ஆப்கான் தேசத்து  மக்கள் மீது பெரும் சுமையாய் விழும் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும், அந்நாட்டின் சமநிலைமைக்கு இது குந்தகம் விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா.சபை மிக முக்கிய பங்காற்றும். எனவே அந்நாட்டில் ஐ.நா.சபை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆப்கனில் ஐ.நா. சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய பணியாளர்களுக்கு முழுமையான, பாதுகாப்பான, தங்கு தடையற்ற உரிமைகள் பாலின வேறுபாடின்றி   வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆப்கன் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில்  அகதிகளாக செல்லாமல் இருக்கவும், மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும், மனிதநேய செயல்பாட்டாளர்களின் சேவை அங்கு கட்டாயம் தேவை என்கிற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி  DAILYTHANTHI)