சீனா ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸில் வெளியான செய்தியை மறுத்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், “எங்கள் நாடு வழக்கமான விண்கல சோதனையில் ஈடுபட்டது என்றும் அதற்கும் ஏவுகனை சோதனைக்கும் தொடர்பு இல்லை,” என்று கூறினார்.
முன்னதாக, சீனாவின் ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனை தொடர்பான செய்தி வெளிவந்தவுடன் அமெரிக்காவில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது.
அந்த நாட்டின் ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் மைல் கல்லெகர், “சீனாவின் இதுபோன்ற செயல்களுக்கு அமெரிக்காவும் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சீனாவுடனான பனிப்போரில் அமெரிக்கா தோற்று விடும்,” என்று கூறினார்.
இதேவிவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கருத்து கூறுகையில், “சீனாவின் ஆயுத திறன்கள் தொடர்பான நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், இந்த குறிப்பிட்ட தகவல் பற்றி கருத்து வெளியிட முடியாது,” என்று தெரிவித்தார்.
(நன்றி BBC TAMIL)