வேலைவாய்ப்பு சட்டம் 1955 (சட்டம் 265) திருத்தம் செய்ய முயலும், வேலைவாய்ப்பு (திருத்தம்) மசோதா 2021 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தந்தைவழி விடுப்பு தொடர்பான ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.
இந்த மசோதாவை மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்தார்.
நீல நகலின் படி, அந்த மசோதா மற்றவற்றுடன், டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை ஒப்பந்தம், மலேசியா-அமெரிக்கா தொழிலாளர் நிலைத்தன்மை திட்டம் மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றால் தேவைப்படும் தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க திருத்தப்பட்டது.
இது பாகுபாடு மற்றும் கட்டாய உழைப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு மகப்பேறு நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களில், சட்டம் 265-இன் 99A பிரிவில் திருத்தம் செய்து, சட்டம் 265-இன் கீழ் எந்தவொரு குற்றத்திற்கும் விதிக்கப்படும் அபராதத் தொகையை RM10,000-லிருந்து RM50,000-ஆக அதிகரிக்க பரிந்துரைக்கிறது.
இது தந்தைவழி விடுப்பில் ஒரு புதிய பிரிவு 60FA முன்மொழிகிறது :
ஒரு திருமணமான ஆண் ஊழியர், ஒவ்வொரு குழந்தைக்கும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குச் சாதாரண ஊதிய விகிதத்தில், வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய தந்தைவழி விடுப்புக்குத் தகுதியுடையவர்.
துணைப்பிரிவு (1)-இன் கீழ், மகப்பேறு விடுப்பு என்பது வாழ்க்கைத் துணைவர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமே.
இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பும் இந்தக் கூட்டத்திலேயே சமர்ப்பிக்கப்படவுள்ளது.
- பெர்னாமா