விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

வாங் யாபிங்

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பீஜிங்: சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.

இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

maalaimalar