அமெரிக்கர்களின் இந்திய பயணத்துக்கு அனுமதி
இந்தியாவுக்கு செல்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கும், இந்திய-பாகிஸ்தான் எல்லையின் 10 கி.மீ. தொலைவுக்கும் செல்லவேண்டாம் என்றும் கூறி உள்ளது.
அமெரிக்கர்களின் இந்திய பயணத்துக்கு அனுமதி: புதிய விதிமுறை வெளியிட்டது அமெரிக்கா
வாஷிங்டன் : அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 4 வகையான சுகாதார விதிமுறைகளை அந்த நாட்டின் சி.டி.சி. என்னும் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விதிக்கிறது. அவற்றில் நிலை 4 மிக உயர்வு, நிலை 3 உயர்வு, நிலை 2 மிதம், நிலை 1 குறைவு ஆகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து விட்டதால், அமெரிக்கர்கள் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் இந்தியப்பயணம் மேற்கொள்ளலாம், அங்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கோ, அறிகுறிகள் உண்டாவதற்கோ வாய்ப்பு குறைவு என்று குறிக்கிற வகையில் நிலை 1-ஐ சி.டி.சி. அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கர்களுக்கு விதித்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதமும், வன்முறையும் தலை தூக்கி இருப்பதால் தனது குடிமக்கள் பாகிஸ்தான் செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவுக்கு செல்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கும், இந்திய-பாகிஸ்தான் எல்லையின் 10 கி.மீ. தொலைவுக்கும் செல்லவேண்டாம் என்றும் கூறி உள்ளது.
maalaimalar