ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்தியை தகர்க்கும் – ஆய்வில் தகவல்

ஜோகன்னஸ்பர்க்: ஒமிக்ரான் மாறுபாடு, டெல்டாவை விட ஆதிக்க மாறுபாடாக மாறுகிறது. ஆனால் தற்போதைய தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரசில் 34 பிறழ்வுகள் உள்ளன.

தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வைரஸ் தோன்றிய தென் ஆப்பிரிக்காவில் விஞ்ஞானிகள் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்கக்கூடியதாக தோன்றுகிறது. ஆனால் அனைத்து தடுப்பூசிகளையும் அதுவால் பயனற்றதாக மாற்ற முடியாது. அது சில நோய் எதிர்ப்பு சக்திகளை மிஞ்சி விடும். அதே வேளையில் தடுப்பூசிகள் கடுமையான நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

கொரோனா தடுப்பூசி

ஒமிக்ரான் மாறுபாடு, டெல்டாவை விட ஆதிக்க மாறுபாடாக மாறுகிறது. ஆனால் தற்போதைய தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்து இருக்கிறது.

மேலும் விஞ்ஞானிகள் கூறும்போது, ‘ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பில் லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த வைரஸ் லேசான அறிகுறியை ஏற்படுத்தும் என்று இப்போதே சொல்ல முடியாது.

இந்த பாதிப்புகள் பெரும்பாலும் இளம்வயதினரிடையே பரவி இருப்பதால் அறிகுறிகள் லேசானவையாக இருந்தது. ஆனால் தற்போது வயதானவர்களும் ஒமிக்ரான் பாதிப்புக்கு இலக்காகி வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் 5 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாடு முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar