“சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட ‘பத்தாயிரக்கணக்கான’ வாக்காளர்கள்”

வாக்காளர் பட்டியலில் காணப்படுவதாகக் கூறப்படுகிற மோசடிகளை அம்பலப்படுத்தி வருகின்ற பாஸ் இளைஞர் பிரிவு, சிலாங்கூரில் சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட  “பத்தாயிரக்கணக்கான” வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளதாகக் கூறுகிறது.

சிலாங்கூரை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தில்லுமுல்லு செய்யக் கூடும் என அது சொல்கிறது.

“நடப்பு சிலாங்கூர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் போதுமான ‘படியாக்கம்’ செய்யப்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்படு விட்டனர்.”

“சிலாங்கூரை என்ன விலை கொடுத்தாவது  கைப்பற்ற வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பதின் அர்த்தம் இதுதானா?” என்று அந்த இளைஞர் பிரிவு வினவியது.

படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர் என்பது வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டவர்களைக் குறிக்கிறது. இரண்டு இடத்திலும் அவர்கள் பெயர் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் மை கார்டு எண்களில் சிறிது மாற்றமிருக்கும்.

அத்தகைய வாக்காளர் பெயர்களை பாஸ் இளைஞர் பிரிவு கடந்த ஒரு மாதமாக அம்பலப்படுத்தி வருகிறது.

அவர்கள் தேர்தலில் இரண்டு முறை வாக்களிக்க முடியுமா என்ற கேள்வியையும் அது  எழுப்பியுள்ளது.

சில பெயர்கள் “படியாக்கம் செய்யப்பட்டவை” என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. அதனை தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொண்டு அந்தப் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

என்றாலும் சில பெயர்கள் உண்மையிலேயே இரண்டு தனிநபர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கு பிறந்த தேதியும் ஒன்றாகும்.

அவர்கள் வெளியில் வந்து அந்த விவரங்களை வெளியிட்ட பாஸ் இளைஞர் பிரிவைச் சாடியுள்ளனர்.