வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
“அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா, அல்லது அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் முறையானதாக இருக்கின்றதா, அவர் குற்றவாளிதானா அல்லது குற்றவாளி இல்லையா என்ற விசாரணை கேள்விகள் அமைந்திருக்கின்றன என்பதை அறிய வேண்டுமானால் அந்த விசாரணை நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடக்காமல் மக்களுக்கு முழுமையாக தெரியவேண்டும் என்ற வகையில் இருக்க வேண்டும்”, என்கிறார் முனைவர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்.
இந்த விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையிலும் மக்கள் பார்வையிட கூடிய வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கு காரணம், இந்த விசாரணையை செய்பவர்கள் அரசியல்வாதிகள்களாகும் என்கிறார்.
இவர்கள் முறையான சரியான கேள்விகளை முன் வைப்பார்கள் என்பதை அறிவதற்காக இந்த விசாரணை பார்வையாளர்களின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக முன்னாள் இலஞ்ச ஒழிப்பு இலாக்காவின் ஆலோசக அவையில் செயலாற்றிய கோமஸ் கூறினார்.