அன்வார் ஜெயிலுக்குப் போனாலும் போகா விட்டாலும் நஜிப்புக்கு அவர் தலையிடிதான்

“எந்த வகையிலும் அது பிஎன் வாக்குகளை இழக்க வழி வகுத்து விடும். எதிர்தரப்புத் தலைவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர்.”

அன்வார் குற்றவாளியாக்கப்படுவார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கை ஆரூடம் கூறுகிறது

பேஸ்: எல்லாம் தெரிந்த விஷயம்தான் – அன்வார் இப்ராஹிம் ஜெயிலுக்குப் போவதுதான் அது. அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுடன் அந்த விஷயம் இணைக்கப்படும். காரணம், அந்த மசோதாவின் கீழ் ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் போலீஸ் அனுமதிகள் தேவை. தெரு ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை.

ஆனால் அம்னோ/பிஎன் னுக்கு அன்வார் மட்டும் எதிரணியல்ல. சிந்தனையுள்ள மலேசியர்களாகிய நாமும் அதில் அடங்குவோம். ஜெயிலுக்கு போன அன்வார் தார்மீக ரீதியில் தூண்டுகோலாக விளங்கும் வேளையில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தை தொடரலாம்.

13வது பொதுத் தேர்தலுக்கு செல்லும் வேளையில் நம்மைக் கவருவதற்கு ஏதாவது ஒரு சொற்றொடர் தேவை. அது “அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருக்கலாம்” என்பதாகும்.

விடுதலை7: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பயங்கரக் கனவு இதுதான்: அன்வார் ஜெயிலுக்கு போனாலும் விடுதலையானாலும் பிஎன் வாக்குகளை இழக்கும்.

அன்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர். பர்மாவின் ஆங் சான் சூ ஷி-யைப் போல அன்வார் மனைவியும் புதல்வியும் ஹீரோக்களாகி விடுவர்.

நில்: அன்வாரை ஜெயிலில் அடைப்பது அம்னோ/பிஎன் னைத் திருப்பித் தாக்கும். அவற்றை வீழ்த்தி விடவும் கூடும்.

எதிர்ப்பு சக்தி: பிஎன் -னை வீழ்த்துவதற்கு இந்த உலகில் அன்வார் மட்டும்தான் ஒரே மனிதர் அல்ல. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கீத்தா கட்சித் தலைவர் ஜைட் இப்ராஹிம் ஆகியோர் இருக்கின்றனர்.

அன்வார் தண்டிக்கப்பட்டால் பொது மக்கள் பார்வையில் பக்காத்தான் இன்னும் வலுவடையும். அது நல்ல வியூகங்களை அமைத்து பெரிய வெற்றிகளை அடையும் என நான் எதிர்பார்க்கிறேன்.

பெர்ட் தான்: ஜோடிக்கப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார் என்பது தொடக்கத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும். அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதி முறையீடு செய்து கொள்ளும் போது அவருக்கு ஜாமீனை அனுமதிக்க மாட்டார் என்றே நாங்கள் அஞ்சுகிறோம்.

அந்த நிலை ஏற்பட்டால் அன்வார் வரும் தேர்தலில் நேரடியாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. மலேசிய நீதிமன்றங்கள் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளுமா?

நஜிப் மனைவியுடன் ஒப்பிடுகையில் அன்வாருடைய மனைவி வான் அஜிஸா வான் இஸ்மாயில் மக்களிடையே மதிக்கப்படுகிறார். அவருக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும். நஜிப் அவர்களே, நீங்கள் அன்வாரை ஜெயிலில் போட்டால் மக்கள் உங்களை வெறுப்பார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க, 250 மில்லியன் ரிங்கிட்டை “துடைத்து” விட்ட ஒர் அமைச்சர் உங்களிடம் இருக்கிறார். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை?

நல்ல மனிதர்கள்: அவர்கள் அன்வாரை ஜெயிலுக்கு அனுப்புவர் என நான் எண்ணவில்லை. காரணம் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர்கள் நன்கு அறிவர். அவரை இரண்டாவது முறையாக தியாகியாக்க அம்னோ விரும்பாது.

என் ஆரூடம்: குற்றச்சாட்டிலிருந்து விடுதலை இல்லாத விடுவிப்பை அவர்கள் வழங்கலாம். அவர் அந்த தீய காரியத்தைச் செய்தார். ஆனால் தண்டிப்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி அதனை பிரச்சார ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.

அப்போது அவர்கள் நீதிமன்றங்கள் நியாயமாக நடந்து கொள்வதாக தம்பட்டமும் அடித்துக் கொள்ளலாம். அதே வேளையில் அன்வாருடைய பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தலாம். அதனை பிஎன் னுக்கு ஆதரவாக பெரிதாக்குவதற்கு உத்துசான் மலேசியாவும் பெரித்தா ஹரியானும் பயன்படுத்தப்படும்..

கலையும் மேகம்: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் ஜெயிலுக்கு போனாலும்  போகா விட்டாலும் நாம் களத்தில் காணப்படும் நிலவரத்தைப் பார்த்தால் நஜிப்-அம்னோ-பிஎன் கதை முடிந்தது எனத் தெரியும். மக்கள் அதிக ஆத்திரமாக இருக்கின்றனர். அதனை அலட்சியம் செய்ய முடியாது. இறுதி வாசகத்தைத் தயார் செய்யுங்கள்.

மாற்றம்: பிரிட்டிஷ் கார்டியன் ஏட்டின் சைமன் டிடால், அன்வாருக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்களைச் சூழ்ந்துள்ள அரசியல் சூழ்நிலையை மிகச் சிறந்த முறையில் ஆய்வு செய்துள்ளார்.

அந்த நாடகக் காட்சிகளுக்கு பின்னணியில் இருப்பவர் மகாதீர் என்பதை அவர் குறிப்பிட மறந்து விட்டார். முதல் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு வித்திட்டவரே அவர்தான். நஜிப், தமது எஜமானர் நடத்தும் சதுரங்க ஆட்டத்தில் வெறும் பகடைக்காய்தான்.

TAGS: