நியூசிலாந்தில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 120 பேர் கைது

நியூசிலாந்து போராட்டக்களம்

நியூசிலாந்தில் இன்று கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வழி என பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கட்டாயம் என்பது எங்களது தனிமனித சுதந்திரம் பாதிக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உச்சக்கட்டமாக கனடாவில் லாரி டிரைவர் முக்கியமான தெருக்களில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நியூசிலாந்திலும் கட்டாயம் தடுப்பூசி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் இருவர் காயமைடந்தனர்.

இதனால் அப்பகுதி போர்க்ளமாக மாறியது. இதையடுத்து,  போராட்டக்காரர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

maalaimalar