அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II: ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நீண்ட காலமாகத் தொடரும் குதப்புணர்ச்சி வழக்கில் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களது வாதத் தொகுப்புக்களை இன்று சமர்பித்து முடித்த பின்னர் நீதிபதி முகமட் அபிடின் முகமட் டியா,” நான் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பை வழங்குவேன்” என அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த வழக்கு விசாரணை 87 நாட்களுக்கு  நடைபெற்ற பின்னர் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடியில் அப்போதைய தமது உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.