உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் – அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Malaimalar