வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக சர்வதேசே நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் சிஎன்என் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, ஆயுத உதவிகளையும் நிதி உதவியும் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
Malaimalar