உக்ரைன் போரால் உலக அளவில் ஏழைகளுக்கு பாதிப்பு- ஐ.நா. சபை எச்சரிக்கை

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச அளவில் ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கி இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்து உள்ளது.

உலகின் சூரிய காந்தி எண்ணை தேவையில் 50 சதவீதத்துக்கும் மேல் உக்ரைன் நாடுதான் தருகிறது. அதுபோல உலகின் கோதுமை தேவையில் 30 சதவீதத்தை உக்ரைன் நாடு பூர்த்தி செய்கிறது. போர் காரணமாக கோதுமை மற்றும் சூரிய காந்தி எண்ணெய் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 45 நாட்டு ஏழைகள் கோதுமை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என்று ஐ.நா. சபை கூறி உள்ளது.

 

 

Malaimalar