காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.
பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்து சென்றனர்.
“தாவுதல் எதிர்ப்பு மசோதாவை இப்போதே அறிமுகம் செய்யுங்கள்!” மற்றும் “ஐபிசிசி இல்லை, ஐபிசிஎம்சியை ஏற்றுக்கொள்!”.என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அவர்கள் அணிவகுத்துச் செல்லும் போது “ஹிடுப் ரக்யாட்” மற்றும் “தவளைகள் வேண்டாம்” போன்ற கோசங்களை எழுப்பினர்.
மேலும் பேரணியின் ஒழுங்கை பராமரிக்க போலீசார் உடன் இருந்தனர்.
பிரதமர் துறையின் துணை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) மாஸ் எர்மாயாதி சம்சுடின் காலை 9.15 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பெர்சே தலைவர் தாமஸ் பான் மற்றும் சுவராம் ஒருங்கிணைப்பாளர் வோங் யான் கே ஆகியோரிடம் இருந்து கோரிக்கை விண்ணப்ப குறிப்பாணைகளை பெற வந்தார்.
கட்சித் தாவலால் ஏற்படும் அரசியல் நிரந்தர்மின்மையை அகற்ற, கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கோருவது பெர்சேயின் குறிப்பாணையாகும்.
இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின் ஒரு பகுதியாக கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெர்சேயின் தலைவரான தாமஸ், பிரதமர் துறையின் துணை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) மாஸ் எர்மியதி சம்சுதீனிடம் பெர்சியின் குறிப்பாணையை சமர்பித்தார்.
இதற்கிடையில், சுவாரம் இயக்கத்தின் குறிப்பாணை சுதந்திரமான போலீஸ் நடத்தை ஆணையத்தை (IPCC) நிராகரிப்பது பற்றியது.
பெரிக்காதான் நேஷனல் அரசாங்கம் சுயாதீன காவல்துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) மசோதாவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக ஐபிசிசி மசோதாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஐபிசிசி விசாரணைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும், அதில் தவறான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க உரிமை இல்லை.
காவல்துறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் ஐபிசிசி மசோதாவை திரும்பப் பெறவும், ஐபிசிஎம்சி மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தவும் சுவராம் அமைப்பு அரசுக்கு அழைப்பு விடுத்தது.
ஏறக்குறைய 40,000 பேர் மற்றும் 37 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான குறிப்பாணையில் கையெழுத்திட்டிருந்தனர். மேலும் IPCC ஐ நிராகரிப்பதற்கான குறிப்பாணையில் கிட்டத்தட்ட 50,000 பேர் மற்றும் 52 இயக்கங்கள் கையெழுத்திட்டனர்.
நாடாளுமன்ற ஜனநாயக செயல்முறையை மீட்டெடுப்பது
இரு அமைப்புகளும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் தங்கள் ஆதரவைக் கோரி மகஜர்களை கொடுத்தனர்.
அவற்றை டிஏபி பொதுச்செயலாளரும் செரெம்பன் எம்பியுமான அந்தோனி லோக், அமானா தலைவர் மற்றும் கோட்டா ராஜா எம்பி முகமது சாபு, மற்றும் முடா தலைவர் மற்றும் மூவார் எம்பி சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். .
அமானா தலைவரும், கோட்டா ராஜா எம்பியுமான முகமட் சாபு, அதன் ஒருங்கிணைப்பாளர் வோங் யான் கேவிடமிருந்து சுவாரம் இயக்கம் மகஜரை பெறுகிறார்.
மலேசியாவின் ஜனநாயகத்தின் மீது பெரும்பான்மையான பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்முறையை மீட்டெடுக்க கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது முக்கியமானது என்றும் முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.
“மலேசியாவில் எப்போதும் மாறி மாறி வரும் அரசியல் சூழ்நிலையால் மக்கள் சோர்வடைந்துள்ளனர், இதன் விளைவாக பல தேர்தல்கள் வந்துள்ளன, இவை அனைத்தும் குறைந்த வாக்குப்பதிவுக்கு ஈடாகும், மேலும் அவர்கள் மலேசியாவில் நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தை நம்பவில்லை”
எனவே, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, கட்சி தாவல் தடுப்புச் சட்டம் மிகவும் முக்கியமானது,” என்றார்.
சையத் சாதிக் கட்சி தாவல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசிஎம்சி மசோதாவுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். இரண்டும் மிக முக்கியமானவை என்றார் அவர்.
“மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றால், இது தான் ஒரே வழி, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர அரசு ஏன் அஞ்சுகிறது என்பது புரியவில்லை”, என்றார்.
பேரணியின் நடுவே, காவலில் இறந்தவர்களுக்காக அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அமைதியாக நடந்த பேரணி காலை 10.30 மணிக்கு நிறைவடைந்தது.
As reported by Malaysiakini reporter Wong Weng Loon