“முதலில் நீங்கள் பகிரங்கமாக அவமதிக்கப்படுகின்றீர்கள். பின்னர் உங்களிடம் மெதுவாகச் சொல்கிறார்- அதனை ஒராண்டுக்கு இழுத்துப் பறிக்கிறார். அடுத்து அவர் மீட்டுக் கொள்கிறார்.”
இண்டர்லாக் இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகிறது
மலேசியாவில் பிறந்தவன்: “இண்டர்லாக்” நாவல் வெகு காலத்துக்கு முன்பே மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தாமதம் செய்ததற்குக் காரணமே இல்லை. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்தப் பிரச்னை எழுப்பப்பட்டதும் அது பள்ளிக்கூடப் பாடப் புத்தகத் திட்டத்திருந்து உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அந்தப் புத்தகம் நூலகங்களில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பாடப் புத்தகமாக அதனை ஏற்றுக் கொள்வது அரசாங்கம் அதன் உள்ளடத்துக்கு இணங்குவதாகப் பொருள்படும்.
அந்தச் சர்ச்சை மூலம் நல்லெண்ணமும் நம்பகத்தன்மையும் இழக்கப்பட்டு விட்டது. அரசாங்க முடிவு யாரையும் கவர்ந்துள்ளதாக நான் எண்ணவில்லை. என்றாலும் அந்த சரியான முடிவுக்காக அரசைப் பாராட்ட வேண்டும்.
ஜேம்ஸ்1067: தொடக்கத்தில் ஏன் இவ்வளவு வேகம்- அதிகாரம் இருப்பதால் மக்களிடம் எதனையும் திணிக்கலாம் என்பதை அரசாங்கம் காட்டியது.
இப்போது திடீரென மன மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் இந்தியர்களை அவமானப்படுத்திய பின்னர் தேர்தல் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால் சில எலும்புத் துண்டுகளை அவர்களுக்கு வீச அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மக்கள் முட்டாள்கள் அல்ல. சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. இந்தியர்களை நீங்கள் வேண்டிய அளவுக்கு அவமானப்படுத்தி விட்டீர்கள். அப்படி இருந்தும் இந்தியர்கள் உங்களுக்கு வாக்களித்தால் அவர்கள் நிச்சயம் முட்டாள்கள்.
அடையாளம் இல்லாதவன்_4182: மலேசியாவின் எதிர்காலத் தலைவர்களான நமது பிள்ளைகளுக்கு உண்மையைத் தவிர வேறு எதனையும் போதிக்கக் கூடாது என்பது அரசியல்வாதிகளுக்கு மிகவும் உணர்ச்சிகரமான பிரச்னையாகத் தோன்றுகிறது.
உண்மையான அறிவாற்றலைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஜோடிக்கப்பட்ட நாட்டு வரலாற்றை தங்களுக்கு வழங்கிய பொறுப்பற்ற அரசியல்வாதிகளினால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அந்த இளம் உள்ளங்கள், முதிர்ச்சி அடைந்ததும் அறியப் போகின்றன.
நான் அமைதியான மலேசியாவை விரும்புகிறேன்: முதலில் நீங்கள் பகிரங்கமாக அவமதிக்கப்படுகின்றீர்கள். பின்னர் உங்களிடம் மெதுவாகச் சொல்கிறார்- அதனை ஒராண்டுக்கு இழுத்துப் பறிக்கிறார். அடுத்து அவர் மீட்டுக் கொள்கிறார். இப்போது நீங்கள் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டு நன்றி பாராட்டுவதாக சொல்கின்றீர்கள். எவ்வளவு அபத்தமானது!
எதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும்?
பெர்க்காசா: இண்டர்லாக் மீட்டுக் கொள்ளப்பட்டது அரசாங்கம் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது
ஷானாண்டோ: பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி அவர்களே, அரசாங்கம் பலவீனமாக இருப்பதாக நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் உண்மையானது. நீங்கள் ஒரு முறையாவது சரியான விஷயத்தை சொல்லியிருக்கின்றீர்கள். அரசாங்கம் எப்போதும் பலவீனமாகவே இருந்து வருகிறது. ஆனால் அதனை மலாய்க்காரர்கள்தான் உணரவில்லை.
அதிகாரத்தில் நிலைத்திருக்க அவர்கள் வரைந்துள்ள கொடூரமான சட்டங்களைப் பாருங்கள். இண்டர்லாக் பிரச்னையே அல்ல. முட்டாள்தனமே பிரச்னை.
டேவிட் தாஸ்: சிறுபான்மைப் பிரிவுக்கு தலைக்கனம் ஏறி விட்டது என்றும் மலாய் எழுத்தாளர் ஒருவருடைய கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் சையட் ஹசான் கூறுகிறார். அந்தப் புத்தகம் ஒரு பிரச்னையே அல்ல. யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். அதனைக் கட்டாயப் பாடமாக்கியதுதான் பிரச்னையே.
இந்தியர்களை அவமானப்படுத்தியது அதன் ஆசிரியர் அல்ல. காரணம் ஜாதியை உருவாக்கியவர் அவர் அல்ல எனவும் சையட் ஹசான் குறிப்பிடுகிறார். மீண்டும் கூறுகிறேன், அதுவும் பிரச்னை அல்ல. ஜாதி என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை. அது இன்றும் தொடருகிறது.
ஆனால் “பறையா” என்னும் சொல் இழிவுபடுத்தும் அர்த்தத்தைக் கொண்டது. அது மரியாதை தரும் சொல் அல்ல. காந்தி இறைவனுடைய குழந்தை எனப் பொருள்படும் ஹரிஜன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக “தலித்” என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. தலித் என்பது பட்டியலிடப்பட்ட ஒரு ஜாதி ஆகும். இந்த நாட்டில் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகள், சலுகைகளைப் போன்ற உரிமைகளை தலித்களும் பெறுகின்றனர்.
பென் ஹோர்: பெர்க்காசா ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியுள்ளது. எல்லாம் ஒரு தந்திரம் தான் – அரசாங்கம் ஏற்கனவே இண்டர்லாக்கை மீட்டுக் கொள்ள முடிவு செய்து விட்டது. மஇகா தலைவர் ஜி பழனிவேல் இந்தியர்களை “கவனிப்பதாக” காட்டிக் கொள்ளும் பொருட்டு தமது வலிமையை காட்டுமாறு அவருக்குக் கூறப்பட்டது. பெர்க்காசாவுக்கு ஒரு வேண்டுகோள்: தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரவும்.
சிம்பாங்4: பெர்க்காசா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக முட்டாள்தனமான கருத்துக்களை எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும். என்றாலும் பிஎன் -னை வீழ்த்த வேண்டும் அது கூறும் யோசனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.